cNmCpon
சிற்றுண்டி வகைகள்

அன்னாசி பச்சடி

என்னென்ன தேவை?

அன்னாசி – 2 கப்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
சர்க்கரை – 2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
தேங்காய் – ½ கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது


எப்படிச் செய்வது?

முதலில் மிக்சி ஜார் எடுத்து அதில் தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் எடுத்து தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின் ஜாரில் அன்னாசி எடுத்து கொரகொரப்பாக அரைத்து அவற்றை கடாயில் போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து மூடி கொண்டு மூடி 10-15 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து மேலும் சில நிமிடங்கள் சமைக்கவும். பின் அடுப்பை அணைத்து தயிர் சேர்க்கவும். சிறிய கடாய் ஒன்று எடுத்து எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சடியில் ஊற்றி கலந்து பரிமாறவும். cNmCpon

Related posts

பூசணி அப்பம்

nathan

சிக்கன் உருளைக் கிழங்கு கட்லெட்

nathan

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan

அவல் புட்டு

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

தினை இடியாப்பம்

nathan

ஃபிஷ் ரோல்

nathan

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan