26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
201705051528198457 evening snacks Noodles Stuffed Samosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

குழந்தைகளுக்கு நூடுல்ஸ், சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை ஸ்டஃப்டு வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா
தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – ஒரு பாக்கெட்,
மைதா மாவு – 100 கிராம்,
கேரட் துருவல் – 100 கிராம்,
உருளைக்கிழங்கு – ஒன்று,
நறுக்கிய வெங்காயம் – 2,
கோஸ் துருவல் – சிறிதளவு,
பச்சை மிளகாய் – ஒன்று,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – 250 மில்லி,
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும்.

* நூடுல்ஸை குழையாமல் லேசாக வேகவிட்டு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்து வதக்கவும்.

* காய்கள் சற்று வெந்ததும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆற விடவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* பிசைந்த மாவை சிறு அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும்.

* வதக்கி வைத்துள்ள மசாலாவை சிறிது எடுத்து அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா ரெடி.

குறிப்பு: நூடுல்ஸை அதிகமாக வேகவிடக் கூடாது. நான்கு அல்லது ஐந்து சமோசா தயாரித்து ஒரே தடவையில் பொரித்து எடுக்கலாம். 201705051528198457 evening snacks Noodles Stuffed Samosa SECVPF

Related posts

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

கோதுமை மசாலா சிப்ஸ் செய்முறை விளக்கம்

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

nathan

சுறாப்புட்டு

nathan

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

பனீர் குழிப்பணியாரம்

nathan

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

nathan