28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கருவளையம் போக்கும் கைமருந்து

ld2268கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக  அகற்ற வேண்டும். அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது  கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும்.

காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில்  வீக்கம் வடியும். கருமை மறையும். கருவளையங்கள் அதிகமாக இருந்தால், அதற்கான முறையான சிகிச்சை அவசியம். பார்லர்களில் அதற்கென்றே  பிரத்யேக மசாஜ் செய்யப்படுகிறது. தொடர்ந்து செய்து கொண்டால், முற்றிலும் மறையாவிட்டாலும், ஓரளவு மாற்றம் தெரியும். சிலருக்கு ஸ்ட்ரெஸ்சின்  காரணமாக கருவளையங்கள் வரும்.

பன்னீரில் நனைத்துப் பிழிந்த பஞ்சை கண்களின் மேல் வைத்து எடுக்கலாம். புருவங்களின் மேல் விளக்கெண்ணெய் தடவி வந்தால், அவை  அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். கண்களின் அழகு எடுப்பாகத் தெரிய வேண்டுமென்றால் புருவங்களை ஷேப் செய்ய வேண்டியது மிக  முக்கியம்.

Related posts

முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்

nathan

தெரிஞ்சிக்கங்க… இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா? இதோ சில ஆயுர்வேத வழிகள்!

nathan

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

sangika

உங்களுக்கு கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. இதை முயன்று பாருங்கள்…

nathan

சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்

sangika

முகத்தை அழகாக மாற்றும் கோப்பி

nathan

பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!

nathan

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

nathan

உங்கள் கழுத்தை அழகாக பேணிப் பராமரிக்க

nathan