27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201704290912123226 varagu rice kollu adai. L styvpf
எடை குறைய

உடல் எடையை குறைக்கும் வரகரசி – கொள்ளு அடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளவும் வேண்டும். இன்று வரகரசி, கொள்ளுவை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் வரகரசி – கொள்ளு அடை
தேவையான பொருட்கள் :

வரகரிசி – 100 கிராம்,
கொள்ளு – 25 கிராம்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
சீரகம், பெருங்காயம் – தேவையான அளவு,
ஓமம் – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு,
துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் – நறுக்கியது – ஒரு சிறிய கப்.
உப்பு – தேவையான அளவு.

201704290912123226 varagu rice kollu adai. L styvpf
செய்முறை :

* வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஊற வைத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* 2 மணி நேரம் கழித்து நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சத்து நிறைந்த வரகரசி – கொள்ளு அடை ரெடி.

Related posts

கவலைய விடுங்க…? உடல் பருமனை குறைப்பது எப்படினு கவலபடுரீங்கள…?

nathan

உடல் எடையை குறைக்க எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?

nathan

உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!

nathan

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!

nathan

உடல் எடையை குறைக்கும் முட்டைகோஸ்

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க…

nathan

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க.

nathan

5 நாட்களில் உடல் எடையை குறைக்க இதை முயன்று பாருங்கள்…

nathan

எடையை குறைக்கும் அற்புத பானம்! எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?

nathan