35.5 C
Chennai
Wednesday, May 28, 2025
1479374172 3904
சிற்றுண்டி வகைகள்

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் – 4
தக்காளி – 2
வெங்காயம் – 2
சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து சாறெடுத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.1479374172 3904

Related posts

மீன் கட்லெட்

nathan

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan

இலகுவான அப்பம்

nathan

ருசியான அவல் போண்டா செய்வது எப்படி?!

nathan

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

nathan

ஃப்ரைடு பொடி இட்லி

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

தினை உப்புமா அடை

nathan