27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
சைவம்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி

சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த ஆலு மட்டர் சப்ஜி. இன்று இந்த ஆலு மட்டர் சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
தண்ணீர் – தேவையான அளவு
பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 300 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
மஞ்சள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி


201704261258508580 how to make aloo matar sabzi SECVPF
செயல்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக குழைய வேகும் வரை வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.

* இப்போது இதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

* அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும்.

* உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி ரெடி.

Related posts

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு மோர் குழம்பு

nathan

பீட்ரூட் பொரியல்

nathan

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

nathan

கோயில் புளியோதரை

nathan

காலிஃப்ளவர் 65

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

பேபி கார்ன் மசாலா

nathan