23.9 C
Chennai
Thursday, Nov 20, 2025
KR8BJZj
முகப் பராமரிப்பு

சிவப்பழகை பெற

* கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1
* உலர்ந்த திராட்சை பழம்-10
இவற்றை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பின்பு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

அழகான பாதத்திற்கு…

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணையை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பாலீஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணையில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.KR8BJZj

Related posts

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக முயன்று பாருங்கள்!….

sangika

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

கன்னம் சிவப்பாக வேண்டுமா? பீட்ரூட் ஃபேஸியல் ட்ரை பண்ணுங்க

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika

எண்ணெய் சருமம் முகப்பருவை ஏற்படுத்துமா?

nathan

வாரம் 3 முறை இத செஞ்சா, சரும சுருக்கமின்றி எப்போதும் இளமையுடன் இருக்கலாம் தெரியுமா?

nathan

நீங்கள் அழகான சருமத்தை பெற செர்ரி பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்! செய்முறை உள்ளே…

nathan

மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? தீர்க்க இத செய்யுங்க

nathan

கருவளையம் எதுக்கு வருகிறதென்று தெரியுமா?

nathan