ஐவிஎப் என்றால் என்ன? எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது? சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?
இயற்கையாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியினருக்கு, இன் விட்ரோ பெர்டிலைசேசன் (In vitro fertilisation- IVF) என்கிற முறை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளுதல் வரம்.
இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு முன், ஐவிஎப் என்றால் என்ன? எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது? சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா? எவ்வளவு செலவாகும் என்பது போன்ற அனைத்துத் தகவல்களைத் தம்பதியினர் அறிந்திருப்பது அவசியம்”
அதோடு, டெஸ்ட் டியூப் பேபி பெற்றுக்கொள்வதுக்கு முன்னர் தம்பதியினர் கவனிக்கவேண்டியவை அதிகம். அதிலும் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை பார்ப்போமானால்..,
* ஐவிஎப் சிகிச்சைக்குச் செல்பவர்களில் 30 சதவீதத்தினருக்கு மட்டுமே குழந்தைப் பிறக்க வாய்ப்புள்ளது. இதனைத் தம்பதியினர் புரிந்துகொண்டு மன ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். அதற்கேற்ப பொருளாதார ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும்.
* வெளிநாடுகளில் ஐவிஎப் சிகிச்சை முறைக்கு ஆகும் செலவு, மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடாகக் கிடைக்கும். இந்தியாவில் ஐவிஎப் சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கிடையாது. இதைத் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டும்.
* சிகிச்சைக்கு முன்னர் தம்பதியினர் உயர்தரமான புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரை, ரத்தக் கொதிப்பு நோயுள்ளவர்கள் அதற்கான சிகிச்சையை முறையாகப் பின்பற்றி, கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள் பரிசோதனை செய்து, உரிய மருத்துகளைத் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும்.
* ரத்தச் சோகை, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருப்பவர்கள், முன்கூட்டியே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனையில் சிசிச்சை பெற்றிருப்பது அவசியம்.
* உடல் பருமனாக இருப்பவர்கள் யோகா, வாக்கிங் என தங்களுக்கேற்ற உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்து 60 கிலோவுக்குள் எடையை வைத்திருக்க வேண்டும்.
* புகைபிடித்தல், மது அருந்துதல், பான்பராக் போடுதல் போன்ற பழக்கம் உள்ள ஆண்கள், அவற்றைக் கைவிடுவது முக்கியம்.
* உடலில் அதிக அளவில் வெயில்படுதல் விந்து உற்பத்தியைப் பாதிக்கும் என்பதால், ஆண்கள் வெயிலில் அலைவதை முடிந்தவரைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க, தம்பதியர் யோகா, உடற்பயிற்சிகளைத் தினமும் செய்வது நலம்.
* சிகிச்சையைத் துவங்கும்போது எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுக்கவேண்டிய அவசியம் வரும் என்பதால், அலுவலகத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்று, மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.