கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை காக்க இந்த சன்ஸ்கிரீன் கிரீம்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
சன் ஸ்கிரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் பெண்கள் கவனிக்கவேண்டியவை
கோடை காலம் தொடங்கி விட்டாலே ‘சன் ஸ்கிரீன்’ பற்றிய பேச்சு அதிகமாக அடிபடத்தொடங்கிவிடுகிறது. ஏன்என்றால் கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை காக்க இந்த சன்ஸ்கிரீன் கிரீம்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
சன்ஸ்கிரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் பெண்கள் கவனிக்கவேண்டியவை:
* 50 முதல் 100 வரையுள்ள ‘எஸ்.பி.எப்’ (சன் புரடெக்ஷன் பேக்டர்) அடங்கிய சன்ஸ்கிரீன் கிரீம் வகைகள் கிடைக்கும். அதிக ‘எஸ்.பி.எப்’ கொண்டவைகளை பார்த்து வாங்குங்கள். அதனை பூசிக்கொண்டால், குறிப்பிட்ட அளவு வரை அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
* வெயிலில் வெளியே செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே பூசிவிடுங்கள். சருமத்தோடு சேர்ந்து இது செயல்பட பத்து நிமிடங்கள் தேவை. வெயிலில் வெளியே போய்விட்டு, வீடு திரும்பியதும் முதல் வேலையாக அதை துடைத்து நீக்கிவிடுங்கள்.
* வெயிலில் இருந்து முகத்திற்கு மட்டுமே பாதுகாப்பு தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கழுத்து, கழுத்தின் பின்பகுதி, கைகள், கால் பாதங்கள் போன்றவைகளிலும் வெயில் பாதிக்கும். அவைகளும் சன்ஸ்கிரீன் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்தான். அங்கும் பூசுங்கள்.
* ஒருமுறை வெயிலில் போய்விட்டு, திரும்பியதும் கிரீமை துடைத்து அப்புறப்படுத்திவிட்டு- அடுத்து வெயிலில் செல்லவேண்டியதிருந்தால் மீண்டும் பூசிக்கொள்ளுங்கள்.