23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
1416383666mosquito 0
மருத்துவ குறிப்பு

டெங்கு நோய்க்கு சங்கு

சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு பற்றிய முழுவிவரத்தையும், அறிந்து கொள்வது நோயை தடுக்க உதவும்.

“ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மற்ற காய்ச்சலைப் போல அல்லாமல், மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். அப்போது, ரத்தத்தில் உள்ள, பிளேட் லெட்ஸ் என்ற ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறையும். மருத்துவர் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் நோயிலிருந்து விரைவில் குணமாகி விடலாம்.
“நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிகம் உடல் எடை கொண்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழவகைகள், மோர், கஞ்சி, நீர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்’.
மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுக்கள் டெங்கு உட்பட, பல காய்ச்சல்கள் வர வாய்ப்பாக அமையும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், இந்நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மலேரியா காய்ச்சல்: பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட கொசு, மனிதர்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா மனிதர்களுக்குப் பரவுகிறது. அதிகக் காய்ச்சலும், உடல் சில்லிட்டு ஏற்படும் நடுக்கமும் இதன் முதல்நிலை அறிகுறிகள். தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும். கொசு கடித்த ஒரு சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு ஒட்டுண்ணி சில மாதங்கள், சமயங்களில் வருடங்கள் கூட உடலில் அமைதியாக இருந்துவிட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போது வெளிப்படும்.
எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மலேரியாவைக் கண்டறியலாம். டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை, பரிந்துரைத்த காலத்துக்கு தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் மலேரியா காய்ச்சலில் இருந்து குணமாகலாம்.
டைபாய்டு காய்ச்சல்: சாலமோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் டைபாய்டு பரவுகிறது. உணவு, நீர் மூலம் பரவும் காய்ச்சல் இது. மழைக்காலத்தில் சுகாதாரமற்ற நீர் காரணமாக குழந்தைகளுக்கு, இது அதிக அளவில் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள். இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு மருந்துகள் உள்ளன. பாதுகாப்பான குடிநீர், உணவு, டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்களிடம் நெருக்கம் தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தனிநபர் சுகாதாரத்தில்
முக்கியத்துவம் கொடுத்தால், இந்தக் காய்ச்சலைத் தவிர்க்கலாம்.1416383666mosquito 0

Related posts

உங்க உணவுக்குடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதன் 10 அறிகுறிகள்!!

nathan

இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

nathan

உங்கள் மனதுக்கு பிடித்த பெண் உங்களை காதல் செய்யவில்லையா கவலையை விடுங்க இத படியுங்க..!

nathan

சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்

nathan

டாக்டர்… எனக்கு ஒரு டவுட்டு!

nathan

எனது 8 வயது மகனின் உயரமானது குறைவாக உள்ளது. எனினும் அவரது உடல் நிறையானது வயதுக்கு ஏற்ற அளவில் போதுமா…

nathan

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

nathan

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

nathan

நொச்சி தாவரத்தின் மருத்துவ குணங்கள்

nathan