29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
sl4676
சூப் வகைகள்

பீட்ரூட் சூப்

என்னென்ன தேவை?

துருவிய பீட்ரூட் – 3/4 கப்,
கேரட் – 1/2 கப்,
லேசாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கப்,
உருளைக்கிழங்கு – 1/2 கப்,
முட்டைகோஸ் – 3/4 கப்,
தக்காளி – 1/2 கப்,
மல்லித்தழை – 4 டீஸ்பூன்,
வெஜிடபிள் சூப் ஸ்டாக் கியூப் – 1,
ஆரஞ்சு ஜூஸ் – 2 பழத்தில் எடுத்தது,
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகு – தேவைக்கு,
தண்ணீர் – 3 கப்,
கெட்டித் தயிர் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

எண்ணெயை சூடாக்கி வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், தக்காளி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் கியூப் சேர்த்து 7 நிமிடங்கள் வேக விடவும். ஆரஞ்சு ஜூஸ், மிளகு, உப்பு சேர்த்து, மேலே கெட்டித் தயிர், மல்லித்தழை தூவி பிரெட்டுடன் சூடாக பரிமாறவும்.sl4676

Related posts

வாழைத்தண்டு சூப் செய்முறை

nathan

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

nathan

தீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

பத்து நிமிட காய்கறி சூப்

nathan

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan