30.8 C
Chennai
Thursday, Jul 10, 2025
masala
பழரச வகைகள்

கோடை வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர்

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு.

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு.

பச்சை மிளகாய் – 1/2
கறிவேப்பிலை – 3 இலை
இஞ்சி – 1/4 இன்ச்

செய்முறை:

* தயிரை ஒரு பௌலில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

* அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

* கடைந்து வைத்துள்ளதை மோரில் அரைத்த விழுது, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!masala

Related posts

ஃபலுடா மில்க் ஷேக்

nathan

கோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு

nathan

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

தேவையான பொருட்கள்:

nathan

வாழைத்தண்டு மோர்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan

உடல் எடையை அதிகரிக்க உதவும் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan