36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…

பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…
நம்மில் பலரும், பொது இடங்களில் ‘வை-பை’ (WiFi) வசதி கிடைக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்க்கிறோம், அது கிடைத்தால் சந்தோஷத்துடன் பயன்படுத்தத் தொடங்குகிறோம்.

ஆனால் பொது ‘வை-பை’ வசதியைப் பயன்படுத்துவதில் கொஞ்சம் கவனம் வேண்டும்.

காரணம், பொது இடங்களில் கிடைக்கும் ‘வை-பை’யை பயன்படுத்தும்போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதனால் நமது செல்போனில் உள்ள படங்கள், வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள் திருடிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் ‘வை-பை’ பாதுகாப்பானது என்றால் அதில் ‘பாஸ்வேர்டு’ போன்ற தகவல்கள் கேட்கப்படும்.

‘பாஸ்வேர்டு’ பயன்படுத்தும்போது செய்திகள், பாதுகாப்பான மறைக்கப்பட்ட (Encrypted) தகவல்களாக இருக்கும்.

WPA அல்லது WPA2 Password கேட்கவில்லை என்றால், பாதுகாப்பில்லை என்று அர்த்தம்.

நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில் (URL Address) https எனக் காட்டும்.

அதற்கு நாம் பயன்படுத்தும் செல்போனை சரியான கால இடைவெளிகளில் அப்டேட் செய்ய வேண்டும். அதன் மூலம், தகவல்களைத் திருடுவது கடினமாகும்.

பொது இடங்களில் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் வங்கிக் கணக்குகள் திருடப்படுவதைத் தடுக்கலாம்.

பொது இடங்களில் வை-பை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் VPN (Virtual Private Network) இணைப்பைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நம்முடைய தகவல்கள் Encry ption செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

பொது ‘வை-பை’யை தேவையற்றபோது தவிர்க்கலாம். ஒருவேளை நீங்கள் பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.

Related posts

“விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க.”

nathan

உங்களுக்கு தெரியுமா செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

முதுமையில் கூன் விழுவதற்கு காரணம் என்ன?

nathan

சிப்பிக் காளான் வளர்ப்பு

nathan

காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க. இல்லன்னா உங்க உயிரை விடுவீங்க.

nathan

தெரிஞ்சிக்கங்க…மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

nathan

குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே

nathan

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் என்ன நடக்கும்?

nathan