201703211052277005 how to make Gooseberry rice amla rice SECVPF
சைவம்

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் புத்துணர்ச்சியோடும் இளமையாகவும் இருக்கலாம். இன்று நெல்லிக்காய் வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 6
சாதம் – 1 கப்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி
கடலைபருப்பு – ½ தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
வேர்கடலை – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* சாதத்தை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

* பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுத்த பின் கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

* அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்).

* விருப்பப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.

* நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி மிகுந்த சுவையாக இருக்கும்.

* இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி

* நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.201703211052277005 how to make Gooseberry rice amla rice SECVPF

Related posts

சுவையான காளான் குழம்பு

nathan

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan

பாகற்காய் வறுவல்

nathan

தேங்காய் சாம்பார்

nathan

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

nathan

மஷ்ரூம் ரைஸ்

nathan

மாங்காய் சாம்பார்

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

காளான் டிக்கா

nathan