29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
ginko 17 1479380952
இளமையாக இருக்க

உங்களை எப்பவும் இளமையாக வைக்க இந்த 5 அரிய மூலிகைகள் முக்கியம் !!

இளமையாக இருப்பது வரப்பிராசதம். இருக்கும் இளமையை தக்க வைப்பது ஒரு கலை. முதுமையும் அழகுதான். ஆனால் முதுமை 50 வயதுக்கு பின்னேதான் வர
வேண்டும் .

இன்றைய காலங்களில் 30ம்களிலேயே வருகிறது. உணவு, ரசாயன அழகு சாதனங்கள் மன அழுத்தம் இவையெல்லாம்தான் காரணம்.

உங்களை அழகை எப்போதும் பொலிவாக வைத்திருக்கும் அரிய மூலிகைகள் நம் இந்தியாவிலேயே கிடைக்கும். அவை எவையெனத் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

ஜின்செங்க் – (குண சிங்கி) இது ஆசியா மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும்.

சரும செல்களை புதுப்பிக்கும். இது போதாதா இள்மையாக இருக்க. அதோடு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

பளபளப்பான சுருக்கமில்லா சருமத்தையும் , உடலுக்கு பலத்தையும் தரும்.

பில்பெர்ரி : பில்பெர்ரியில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. முதுமையை தடுக்கும். புதிய செல்களை உருவாக்கும். சுர்க்கம், தழும்பை மறைய வைக்கும். சாப்பிடவும், சருமத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

ஜிங்கோ : இது ஜிங்கோ என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ரத்த குழாயை சுத்தப்படுத்தும் அதிக ஆக்ஸிஜன் மூளைக்கும் கண்களுக்கும் செல்ல உதவுகிறது. முதுமைக்கு எதிராக போராடுகிறது. சருமத்திற்கு போஷாக்கு அளித்து பொலிவாக வைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

வல்லாரை : வல்லாரை மருத்துவ குணங்கள் பெற்றவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இது அழகிற்காகவும் உபயோகபப்டுத்தப்படுகிறது. இது சரும செல்களை புதுப்பிக்கிறது. சுருக்கங்களை தடுக்கும். அதிக ஆக்ஸிஜனை உடலில் பெற உதவும். இளமையாக இருக்க வல்லாரை மிக முக்கியமான மூலிகை

மஞ்சள் : நம்ம ஊர் மஞ்சள் எளிதில் கிடைத்தாலும் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதில் அத்தனை அரிய குணங்கள் பெற்றுள்ளன. இது மிகச் சிறந்த முதுமையை தடுக்கும் மூலிகையாகும். சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது. சுருக்கங்களை தடுக்கும்.

ginko 17 1479380952

Related posts

முதுமையை முறியடிக்கும் முந்திரி,beauty tips in tmil

nathan

கொடியிடை பெறுவது எப்படி?

nathan

வயதான தோற்றத்தை போக்கவேண்டுமா??இத ட்ரை பண்ணுங்க நிச்சயம் பலன்!!

nathan

நீங்கள் படுக்கும் முறையும் வயதான தோற்றத்திற்கு காரணமாகிவிடும் என்பது தெரியுமா?

nathan

என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!

nathan

முதுமையை தடுக்கும் தேன் ஃபேஸ் பேக்

nathan

வயதானாலும் அழகு, இளமை, ஆண்மையுடன் இருக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்???

nathan

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்கனுமா? இந்த ஒரு வழியை ட்ரை பண்ணுங்க

nathan

பெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்

nathan