36.8 C
Chennai
Saturday, Jul 5, 2025
fight 2670751f
மருத்துவ குறிப்பு

ஆழ்மனத்தின் குறைகளை சரி செய்து மனோவியாதிகளை போக்கும் ஹிப்னோ தெரபி முறை

மனிதனாக பிறந்த நமக்கு பிரச்சினைகள் பலவிதம் உண்டு. சிலருக்கு இனம்புரியாத மனோ வியாதிகள் உண்டு எதனால் என்றே பலருக்கும் தெரியாது.
எத்தகைய மாத்திரைகளும் ஆலோசனைகளும் இது போன்ற விஷயங்களுக்கு பலனளிக்காது.

இனம்புரியாத பயம் என்பது என்னவென்றால் சிலருக்கு நெருப்பை பார்த்தால் பயம் வரலாம், சிலருக்கு விமானத்தில் செல்வதற்கு பயம் வரலாம்.

சிலருக்கு சாலைகளில் வண்டி ஓட்டுவதற்கே சிறுவயதில் இருந்து பயம் இருக்கலாம். சிலருக்கு திருமணம் செய்வதற்கு கூட பயம் வரலாம்.

இது போல எண்ணற்ற மனநலம் சார்ந்த குறைபாடுகளை சொல்லலாம். இவற்றிற்கு பலவிதமான வைத்தியங்கள் பார்த்தாலும் பலருக்கு பலன் கிடைப்பதில்லை. இது போன்ற விஷயங்களை சரி செய்வதற்காகவே வந்துள்ள மருத்துவம்தான் ஹிப்னோ தெரபி முறை.

ஹிப்னோ தெரபி முறை என்பது நம் ஆழ்மனதில் சிறுவயதில் இருந்து பார்த்தது, கேட்டது, படித்தது முதலான நிகழ்வுகளால் மனதிற்குள் ஒரு விஷயத்திற்கு இனம்புரியாத பயம் மற்றும் வெறுப்பு ஏற்படுவதை சரி செய்யும் ஒரு நவீன சிகிச்சை முறையாகும்.

இது நம் நினைவலைகளில் பதிந்து கிடக்கும் தேவையில்லாத விஷயங்களை அகற்றி நமக்கு பிடிக்காத விஷயத்தின் மேல் ஒரு தெளிவு ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும். இதன் மூலம் நம் முன் ஜென்ம நிகழ்வுகளினால் நம் ஆழ் மனதில் பதிந்து இருக்கும் பிரச்சினைகள், பயங்களை கூட சரி செய்யலாம் என்பது சற்று ஆச்சரியமான செய்தியாகும்.

நம்மை ஹிப்னாடிச முறையில் மயக்க நிலையில் ஆழ்த்தும் மருத்துவர்கள் நம் வாயில் இருந்தே நமக்கு என்ன பிரச்சினை என கேட்க வைக்கும் மருத்துவ முறையே இதுவாகும்.

இதன்படி ஒரு நபரின் மனதில் தேவையில்லாமல் சஞ்சலப்பட்டு கிடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நம் இப்போதைய வயதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நம் ஒரு வயது வரை சென்று நாம் எதனால் சிறுவயதில் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பதுதான் இந்த மருத்துவமுறை.

தீராத பல மனோவியாதிகளுக்கு தீர்வு காணும் இந்த முறைக்கு சென்னை, சேலம், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் புகழ்பெற்ற மருத்துவர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமுறையில் அதிகம் மருந்து மாத்திரைகள் கிடையாது என்பதும் இதன் மூலம் பலர் பயன்பெற்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.fight 2670751f

Related posts

ஆண் – பெண் நண்பர்களாக இருக்க முடியுமா?

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan

தேவையான முதலுதவி பற்றி அறிந்து வைத்திருப்போம்!படிக்கத் தவறாதீர்கள்

nathan

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..!

nathan

வார்த்தைகளில் வழுக்கி விழுந்திட வேண்டாம்

nathan

ஆண்களே! மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா மன உளைச்சலை குறைக்க 5 வழிகள்

nathan

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

nathan

அலட்சியம் வேண்டாம்! கைநடுக்கம் இருக்கின்றதா?… இந்த நோய்களுக்கான அறிகுறியே இது

nathan