32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
மருத்துவ குறிப்பு

வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியை பயன்படுத்த வழி உண்டா?

எங்கே பார்த்தாலும் சோலார் விளக்கு, சோலார் ஹீட்டர் எனப் பேசுகிறார்களே… வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியைப் பயன்படுத்த வழி உண்டா?

சுந்தரேசன் ரங்கநாதன், டாட்டி (தமிழ்நாடு அட்வான்ஸ்டு டெக்னிகல் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்) மொபைல் ரீசார்ஜர், லேப்டாப் ரீசார்ஜர், வாட்டர் ஹீட்டர் என பல உபயோகங்களுக்கும் சோலார் சக்தியைப் பயன்படுத்த முடியும். இப்போது லேட்டஸ்ட்டாக ரிமோட்டில் இயங்கும் எல்.இ.டி. விளக்குகள் வந்திருக்கின்றன. மொட்டை மாடி அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் சோலார் பேனலை பொருத்த வேண்டும். அது சின்ன காலண்டர் அளவில்தான் இருக்கும். செலவும் 2 ஆயிரம்தான். இந்த விளக்குகளைப் பொருத்த எலக்ட்ரீஷியன்கூடத் தேவையில்லை. பிளக் கனெக்‌ஷன் மூலம் இணைத்துவிடலாம். சீலிங்கில் விளக்கைப் பொருத்திவிட்டு, ரிமோட்டில் ஸ்விட்ச்சை இயக்கலாம்.

இவை தவிர சமையலறை உபயோகத்துக்கான சோலார் அடுப்புகள், சோலார் குக்கர் போன்றவையும் கிடைக்கின்றன. காய்கறிகளை உலர வைக்கிற சோலார் டிரையர்கள்கூடக் கிடைக்கின்றன. சூரிய சக்தியில் இயங்கும் அடிப்படையான இந்த உபகரணங்களை வீட்டில் பொருத்திக் கொள்வதன் மூலம் மின்சாரச் செலவை பெருமளவில் மிச்சப்படுத்தலாம். பராமரிப்பும் குறைவு. காற்று மாசடையாது.

Related posts

மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஏன்?

nathan

மனநல பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

nathan

ஞாபகமறதி நோய் (Dementia)

nathan

தெரிஞ்சிக்கங்க…சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!!

nathan

உங்க சிறுநீரகத்தை மிக எளிமையாகவும் சீக்கிரமாகவும் சுத்தம் சூப்பர் டிப்ஸ்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா?

nathan

வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? இதை படிங்க…

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்

nathan

தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan