கர்நாடகா மாநிலத்தில் வெந்தயக்கீரையை வைத்து செய்யும் இந்த சித்ரான்னம் மிகவும் பிரபலம். இன்று இந்த வெந்தயக்கீரை சித்ரான்னத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கர்நாடகா ஸ்பெஷல் வெந்தயக்கீரை சித்ரான்னம்
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை – 2 கட்டு,
அரிசி – 2 கப்,
வெங்காயம் – 1,
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையானது,
அரைப்பதற்கு :
துருவிய தேங்காய் – 1கப்,
பச்சை மிளகாய் – 4,
பூண்டு – 2,
சீரகம் – அரை ஸ்பூன்,
தாளிப்பதற்கு :
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிது.
செய்முறை :
* அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொளளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து வைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளித்த கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெந்தயக்கீரையை போட்டு வதக்கவும்.
* கீரை நன்கு வதங்கியதும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து விட்டு, தேவையான சாதம், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதான தீயில் வைத்து இறக்கவும்.
* வெந்தயக் கீரை சித்ரான்னம் ரெடி.
* தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு காரப் பொரியல், அப்பளத்துடன் பரிமாறவும்.