1489651259 5979
சிற்றுண்டி வகைகள்

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்
உருளைக் கிழங்கு – 2
கேரட், பீன்ஸ், – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு – 2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கறிமசாலா தூள் – 1 டீஸ்பூன்
ப்ரெட் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி நன்றாக சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளலாம். சோமாஸ் செய்முறை மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் நெய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து காய்கறி பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும். இதேபோல் மொத்தமாக சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணையைக் காய வைத்து செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.1489651259 5979

Related posts

இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி – MTR Style Instant Wheat Rava Idli Recipe – Instant Breakfast Recipes

nathan

பிரெட் பீட்சா

nathan

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி

nathan

ரவா சீடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

சிக்கன் வடை………..

nathan

கம்பு கொழுக்கட்டை

nathan

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

nathan