சத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த கம்பு கார சட்னி
தேவையான பொருட்கள் :
கம்பு – 100 கிராம்,
கடலைப்பருப்பு – 50 கிராம்,
வெங்காயம் – 2,
காய்ந்த மிளகாய் – 8,
உப்பு – தேவையான அளவு,
இஞ்சி, பூண்டு – 50 கிராம்,
புளி – சிறிது.
தாளிக்க…
காய்ந்தமிளகாய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு வதக்கிய பின்னர், வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கவும்.
* வதக்கியவை ஆறியதும் புளி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
* சத்தான கம்பு கார சட்னி ரெடி.