தலைமுடி அலங்காரம்

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

ஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் மிகப்பெரிய அழகியல் பிரச்சனை தான் நரை முடி. இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.

நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

எனவே நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர்.

இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

செயல் #1 முதலில் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செயல் #2 பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

செயல் #3 பின்பு அந்த கலவையை குளிர வைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செயல் #4 தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

செயல் #5 பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாகஅந்நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக்கூடாது.

செயல் #6 பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும்.

குறிப்பு உருளைக்கிழங்கு நீரை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக்கூடாது. மேலும் இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், 2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இயற்கை வழிகளை நாடும் போது, பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

white hair 10 1478759560

Related posts

நரை முடிக்கு இயற்கையான டை எப்படி செய்வது என தெரியுமா?

nathan

உங்கள் தலையில் உள்ள ஹேர் டை கறையை போக்கனுமா?

nathan

அழகான சலூன் ஸ்டைல் ஹேர் பெறுவது எப்படி எனத் தெரியுமா ?

nathan

இயற்கை முறைகளைக் கொண்டு இந்த இளநரையை மாற்றி விடலாம் முயன்று பாருங்கள்

sangika

உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டுமா?..

sangika

கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும்…..

sangika

எளிமையான ஹேர் ஸ்டைல்கள்

nathan

ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?

nathan

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika