என்னென்ன தேவை?
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
ரோஸ் சிரப் – 4 டீஸ்பூன் (பெரிய கடைகளில் கிடைக்கும்)
காய வைத்துப்பதப்படுத்திய தேங்காய் பொடி – 1 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை,
அலங்கரிக்க பாதாம் அல்லது முந்திரி – 10,
அலங்கரிக்க தனியாக ேதங்காய் பொடி – 1/4 கப்.
எப்படிச் செய்வது?
அடி கனமான கடாயில் நெய்விட்டு தேங்காய் பொடியை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். இத்துடன் கன்டென்ஸ்டு மில்க் விட்டு கிளறவும். இது சுருண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும். கடாயை இறக்கி சிறிது ஆறவிட்டு ரோஸ் சிரப்பை சேர்த்துக் கிளறி, சிறிது சூடாக்கியிருக்கும்போது உருண்டைகளாக லட்டு பிடித்து தேங்காய்த்தூளின் மேல் உருட்டி அதன் மேல் ஒரு முந்திரி அல்லது பாதாம் வைத்து அலங்கரித்து படைத்து பரிமாறவும். இயற்கையாக சத்தாக வேண்டுமென்றால் கேரட்டையும் துருவி விருப்பமான ஃபுட் கலர் சேர்த்து பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று வித்தியாசமாகச் செய்யலாம்.