சிலருக்கு முகத்தில் சிறு சிறு பொரிகள் இருக்கும். இதற்கு காரணம் முகத்தில் படும் முடிக்கற்றைகளால் உண்டாகும் அலர்ஜிதான்.
கூந்தலின் கடினம் சருமத்தில் பாதிப்பேற்பட்டு இது போல் தோன்றுகிறது.
இதற்கு இயற்கையான எளிய இரண்டு தீர்வுகள் உண்டு. உபயோகப்படுத்திப் பாருங்கள். பொரிகள் மறைவதோடு சருமம் மின்னும்.
செய்முறை – 1
ரோஜா இதழ்களை சந்தன பலகையில் வைத்து மைய அரையுங்கள். அதனுடன் அதே அளவு சந்தனம் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள் மறையத் தொடங்கும்
தேவையானவை :
செய்முறை – 2
இவ்விரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பருத்தி துணியினை குளிர்ந்த நீரில் முக்கி பிழிந்து அதனை முகத்தில் போடுங்கள்.
அதன் மீது இந்த கலவையை பற்று போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் பலன் தெரியும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள்.
துணியில்லாமலும் முகத்தில் போடலாம். ஆனால் அதன் சாறு எளிதில் வழிந்துவிடும். அதற்காகத்தான் துணியில் போட்டால் எளிதில் சருமம் உறிஞ்சிக் கொள்ளும்.
கசகசா – 2 டீஸ்பூன்
துளசி இலை – 10
இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.