25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
sl4684
சிற்றுண்டி வகைகள்

ஷாஹி துக்ரா

என்னென்ன தேவை?

பிரெட் – 10 ஸ்லைஸ் (ஓரங்கள் வெட்டி முக்கோண வடிவில் வெட்டவும்),
பால் – 5 கப்,
கிரீம் – 1 கப் (பாலாடை),
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
சர்க்கரை – 1 1/2 கப்,
குங்குமப்பூ – 1/4 டீஸ்பூன்,
சோளமாவு – 1/2 டீஸ்பூன் (1 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து வைக்கவும்),
மஞ்சள் ஃபுட் கலர் – 1 துளி,
நறுக்கிய (முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா) – 5 டீஸ்பூன்.

சர்க்கரைப் பாகுக்கு…

சர்க்கரை – 1 கப்,
தண்ணீர் – 1/2 கப்,
ரோஜா பன்னீர் – 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாகுக்கு கொடுத்துள்ளதை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும். பால், கிரீம், சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பாதி அளவு ஆகும் வரை கொதிக்க விடவும். அதில் சோளமாவு கலவை, மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து லேசாக கட்டி ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.

எண்ணெயை சூடாக்கி பிரெட் முக்கோணங்களை பொன்னிறமாக பொரித்தெடுத்து, சர்க்கரை பாகில் முக்கி வடித்து வைக்கவும். வடித்த பிரெட் முக்கோணங்களை ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல் பால் கலவையை ஊற்றவும். நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி சூடாகவோ, ஜில்லென்றோ பரிமாறலாம்.sl4684

Related posts

உருளைக்கிழங்கு மசாலா போளி செய்ய சிரமப்பட வேண்டாம் இதோ……..

nathan

அவல் கிச்சடி

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

உப்புமா பெசரட்டு

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

Brown bread sandwich

nathan

சப்பாத்தி – தால்

nathan

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

nathan