32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
சிற்றுண்டி வகைகள்

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

தேவையானவை:
கடலைப்பருப்பு – 300 கிராம்
பச்சரிசி – 25 கிராம்
கருப்பட்டி – 300 கிராம்
சோடா உப்பு – கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – தேவைக்கேற்ப
ஏலக்காய் – 5

செய்முறை:
காலையில் இட்லி செய்ய வேண்டுமென்றால் முந்தினநாள் இரவே அரிசி மற்றும் கடலைப்பருப்பை ஊறவைக்க வேண்டும். காலையில் தண்ணீர் இறுத்து புதுத்தண்ணீர் ஊற்றி ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இத்துடன் கருப்பட்டி மற்றும் ஏலக்காயைச் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேங்காய்த் துருவல், சோடா உப்பு சேர்த்து இட்லித்தட்டில் மாவை ஊற்றி வைத்து, ஆவியில் வேகவைத்து எடுத்தால் கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெடி. இது சுவையான, சத்தான உணவாகும்.

Related posts

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

கேழ்­வ­ரகு புட்டு

nathan

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

nathan

ஸ்நாக்ஸ்: மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி

nathan

சவ்சவ் கட்லெட்

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

பாலக் பூரி

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan