28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
kathirikai masiyal brinjal masiyal 1
சைவம்

கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி

கத்தரிக்காய் மசியல் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பெரிய கத்தரிக்காய் – 5,
தக்காளி – 2,
புளி – கோலிக்குண்டு அளவு,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

எண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 4,
காய்ந்த மிளகாய் – 2,
துருவிய தேங்காய் – 1/4 மூடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைக்கவும்.

* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* கத்தரிக்காயை நன்றாகக் கழுவி, காம்பை மட்டும் எடுத்து விட்டு சுற்றிலும் எண்ணெய் தடவவும். ஸ்டவ்வில் நெருப்பில் வாட்டவும். தோல் நன்றாகக் கருக்கும் அளவுக்கு வாட்ட வேண்டும். அதை எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் தோலை நீக்கி சதையைத் திறந்து பூச்சி, புழு எதுவும் இல்லை என்பதை பார்த்துவிட்டு தனியாகப் பிசைந்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலையும் சேர்க்கவும்.

* அடுத்து அதில் கத்தரிக்காய் பிசைந்து வைத்ததை சேர்த்து உப்பு போடவும்.

* நன்றாக அனைத்து சேர்ந்ததும் கடைசியாக கொத்தமல்லி இலை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

* சூப்பரான கத்தரிக்காய் மசியல் ரெடி.kathirikai masiyal brinjal masiyal 1

Related posts

சிம்பிளான… சுரைக்காய் குருமா

nathan

வெஜிடபிள் கறி

nathan

சுவையான சத்தான வெண்டைக்காய் பொரியல்

nathan

வாங்கி பாத்

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

எள்ளு சாதம்

nathan

கத்தரிக்காய் குழம்பு

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

புளியோதரை

nathan