28.6 C
Chennai
Saturday, May 18, 2024
1474884334 704
அசைவ வகைகள்

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

தேவையான பொருட்கள்:

வஞ்சிரம் மீன் கருவாடு – 1/4 கிலோ
சிறிய வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
பூண்டு – 1 முழு பூண்டு
காய்ந்த மிளகாய் – 5
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கீற்று
கொத்தமல்லி – தெவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வஞ்சிரம் மீன் கருவாடு துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் கருவாடு துண்டுகளை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும். ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவை இல்லை. சுவை பார்த்து பிறகு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம். கறிவேப்பிலையும், கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு தயார்.1474884334 704

Related posts

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய…

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

எண்ணெய்யில் பொறித்த காரசாரமான மட்டன் லெக் பீஸ்

nathan

இறால் பிரியாணி

nathan

சுவையான முட்டை கறி செய்ய !!

nathan

சைனீஸ் ப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்…!

nathan

சூப்பரான மட்டன் குடல் குழம்பு

nathan

செட்டிநாடு மீன் குழம்பு (தேங்காய் சேர்க்காதது) !

nathan

சுவையான கோபி 65 செய்வது எப்படி

nathan