28.2 C
Chennai
Wednesday, Jul 23, 2025
tomato sambar 08 1470645739
சைவம்

சிம்பிளான… தக்காளி சாம்பார்

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Easy Tomato Sambar Recipe

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு/துவரம் பருப்பு – 1/2 கப்
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
தண்ணீர் – 2 கப் + தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளிச்சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்-1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதோடு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
பின்பு புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி!!!tomato sambar 08 1470645739

Related posts

மஷ்ரூம் ராஜ்மா குருமா

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு

nathan

பட்டாணி புலாவ்

nathan

பச்சை சுண்டைக்காய் குழம்பு

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

எள்ளு சாதம்

nathan

வெண்டைக்காய் பொரியல்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலை சாதம்

nathan