23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
143
மருத்துவ குறிப்பு

பெண்களின் கருப்பையை பலமாக்கும் தண்ணீர் விட்டான்

ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பையை பலமாக்குகிறது.

கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். தண்ணீர் விட்டான் எனப்படும் மூலிகை செடியானது சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும்.

உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும்கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. தண்ணீர் விட்டான் வேரின் சாறு நான்கு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும்.

இதனை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்குக் கட்டுப்படும். தாய்மையடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அது கட்டுப்படுத்தப்படும். மெனோபாஸ் பருவத்தில் ஈஸ்டோரோஜன் குறைவாக சுரப்பதால் அதிக அளவில் மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்க தண்ணீர் விட்டான் வேரை சாறு எடுத்து 5 நாட்களுக்கு மூன்று வேளை உட்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு சரியாக சுரக்கும்.

Related posts

கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

nathan

வாய் துர்நாற்றமா? யாரும் பக்கத்துல வரதில்லையா? இத வெறும் 5 நாட்கள் சாப்பிட்டா போதும்!

nathan

உடல் எடை அதிகரித்து குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

லேடீஸ் ஹாஸ்டல் A to Z

nathan

உங்களுக்கு தெரியுமா கருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்?

nathan

பர்சனல் லோன்… சுமையைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

பசியின்மையை நீங்கும் இலந்தை

nathan

முதுகு வலி விலகுமா?

nathan

உணவை வேக வேகமா சாப்பிடுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan