31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

தினமும் காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது புத்துணர்ச்சியை தரும். இன்று கம்பு, பச்சைப்பயிறு வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு, துருவிய வெல்லம், தேங்காய்த்துருவல் – தலா அரை கப்,
நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை :

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

* ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு அதில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

* புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்ற துறையில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

* சுவையான கம்பு – பச்சைப்பயறு புட்டு தயார்.

Related posts

சுக்கா பேல்

nathan

சுரைக்காய் தோசை

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

nathan

சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம்

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

பருப்பு வடை,

nathan