36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி

மிகவும் சுலபமாக செய்யக்கூடியது திரட்டு பால். இதன் சுவை அபாரமாக இருக்கும். இப்போது இந்த திரட்டுப்பாலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

வெண்ணை நிறைந்த பால் (full cream milk) – 1 லிட்டர்
நெய் – 10௦ கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலப்பொடி – சிறிதளவு (வேண்டுமானால்)

செய்முறை :

* ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.

* அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கும். பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.

* பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கவும்.

* சிம்மில் வைத்து நன்றாக கிளறனும். திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்.

* அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.

* தித்திப்பான திரட்டிப்பால் ரெடி….

குறிப்பு :

* பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம்.

* திரட்டுப்பால் செய்யும் போது அடிக்கடி பார்த்து, அடி பிடிக்காமல், கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

Related posts

கார பூந்தி

nathan

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan

யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்

nathan

பிடி கொழுக்கட்டை

nathan

மொறுமொறுப்பான… ரவா கட்லெட்

nathan

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

விருதுநகர் புரோட்டா

nathan

மொறு மொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan