மேற்கத்திய சுகாதார நிபுணர்களின் படி, ஒருவர் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சி மற்றும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். இருப்பினும், உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடை பராமரிப்பு என்று வரும் போது, ஒவ்வொரு கலாச்சாரமும் வேறுபடும் மற்றும் குறிப்பிட்ட விதிமுறைகள் இருக்கும்.
இக்கட்டுரையில் ஜப்பானியர்கள் ஆரோக்கியமாகவும், தொப்பையின்றி இருக்கவும், அவர்கள் பின்பற்றும் நான்கு ரகசியங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதை சற்று படித்துப் பாருங்கள்.
உலக சுகாதார அமைப்பு உலகிலேயே ஜப்பானியர்கள் தான் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதற்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் வழிகளும், நிவாரணிகளும் சற்று வித்தியாசமாக இருப்பதும் முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.
உடலின் வெதுவெதுப்புத் தன்மை நாம் உண்ணும் உணவு தான் ஆற்றலாக மாறுகிறது. கோடைக்காலத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டால், உடல் அதிக வெப்பமடையாமல், உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படும். அதேப் போல், குளிர்காலத்தில் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் மிகவும் குளிர்ச்சியடையாமல் வெதுவெதுப்பாக இருக்கும். ஜப்பானியர்கள் இப்படி தான் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரித்து, தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்கள்.
நீர் குடிக்கமாட்டார்கள் ஜப்பானியர்கள் உணவு உண்ணும் போது நீரைப் பருகினால், அது செரிமானத்தை பாதிப்பதாக நம்புகின்றனர். எப்படியெனில் நீர் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நடுநிலைப்படுத்திவிடும். இதனால் உணவுகள் செரிமானமாவது கடினமாகும். அதனால் தான் ஜப்பானியர்கள் உணவு உட்கொள்ளும் போது நீரைக் குடிக்க மாட்டார்கள்.
சுமோ மற்போர் மல்யுத்த வீரரைப் போல் சாப்பிட்டால், குண்டாகத் தான் நேரிடும் சுமோ மற்போர் மல்யுத்த வீரர் காலையில் எதுவும் சாப்பிடமாட்டார்கள். காலையில் எழுந்ததும் கடுமையான பயிற்சியில் ஈடுபடுவார்கள். பின் மதிய வேளையில் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, சிறிது நேரம் தூங்குவார்கள். ஒரு நாளைக்கு இரு வேளை நன்கு வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.
நீங்களும் இப்படி தினமும் நன்கு உடற்பயிற்சியை மேற்கொண்டு, வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் தான் அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சியை விட உணவுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.
ஆகவே அளவாக சாப்பிட்டு, சரியான அளவில் உடற்பயிற்சியை செய்து, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது தான் ஜப்பானியர்களின் பழக்கமும் கூட.
சுடுநீர் குளியல் சுடுநீர் குளியல் உடலை ரிலாக்ஸ் செய்யும், மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். ஜப்பானியர்களின் படி சுடுநீர் குளியல், செரிமானத்திற்கு உதவும், சரும நிறத்தை அதிகரிக்குமாம்.