அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

Beauty-Neck16-jpg-854சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.
அதற்கு சில டிப்ஸ்:

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.

Related posts

பளிச்சென்ற முகத்திற்கு

nathan

அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

nathan

தனுஷ் வீட்டுக்குள்ளே இப்படி ஒரு ஆளா? -வெளிவந்த தகவல் !

nathan

கசிந்த ரகசியம் இதோ! சனம் ஷெட்டி 3வது காதல் வயப்பட்டது எப்படி தெரியுமா?

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் :கதறி அழுத காதலி!!

nathan

குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில குறிப்புகள்!

nathan

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதனால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்!!!

nathan

முகம் வசீகரமாக இருக்க…

nathan