22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
blood donation 2725018
மருத்துவ குறிப்பு

நீங்கள் கொடுக்கும் இரத்தம் 250 பேரை காப்பாற்றும்

நீங்கள் கொடுக்கும் இரத்தம் 250 பேரை காப்பாற்றும்! பரிசு கொடுத்தால் பல் இளித்துக்கொண்டு வாங்கும் காலம் இது. அதில் பிரதிபலன் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால் ஒருவர் செய்யும் தானம் என்பது சாதாரணமானதல்ல. தர்மம் தலையைக் காப்பது போல தானம் ஆத்மாவை மேம்படுத்தும். தானங்களில் நிறைய வகைகள் உள்ளது. அதில் உயர்ந்ததாக அன்னதானம் கூறப்படுகிறது.

என்றாலும் இரத்த தானம் தனித்துவம் கொண்டது. நம் கண் எதிரில் உயிருக்குப் போராடுபவர்களை மீட்கும் வரம் கொண்டது. 90 சதவீதம் பேர் இந்த புண்ணிய தானத்தை புரிந்து கொள்ளாமலே உள்ளனர். இன்றைய சூழலில் இரத்ததானம் எவ்வளவு அவசியமானது, அத்தியாவசியமானது என்பதை நமது மாலைமலர் மருத்துவர் கமலிஸ்ரீபால் குறிப்பிட்டுள்ளார். படியுங்கள்.. படித்ததும் இரத்ததானம் செய்யத்தோன்றும்! இரத்தம், இரத்தம் என்று சொல்கின்றோம். இரத்தம் என்றால் என்ன? இரத்தம் ப்ளாஸ்மா எனும் திரவத்தினால் ஆனது. பலவகை செல்களை தன்னுள் கொண்டது.

ஒரு மனிதனின் உடலில் 5-6 லிட்டர் இரத்தம் உள்ளது. பெண்ணின் உடலில் இது சற்று குறைந்து இருக்கலாம். இரத்தத்திற்கு அநேக வேலைகள் உள்ளன. இரத்தம் பெரிய இரத்தக்குழாய்கள் முதல் நுண்ணிய இரத்தக் குழாய்களில் உள்ளது. எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இரத்தத்தில் 40 சதவீத செல்கள் உள்ளன. இவை மூன்று பிரிவுபடுகிறது.

சிவப்பு செல்கள்: இந்த செல்களாலேயே இரத்தம் சிவப்பாக இருக்கின்றது. ஒரு சொட்டு இரத்தத்தில் 5 மில்லியன் செல்கள் உள்ளன. தொடர்ந்து புதிய செல்கள் உருவாகி, உடையும் பழைய செல்களின் இடத்தை நிரப்புகின்றன. இதில் இருக்கும் ரசாயனம் தான் ஹீமோக்ளோபின். இது ஆக்ஸிஜனை தன்னுடன் இணைத்துக் கொண்டு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றது.

வெள்ளை செல்கள்: வெள்ளை செல்கள் பல பிரிவு படுகின்றது. இவை நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி. கிருமிகள் தாக்குதலில் இருந்து உடலை காப்பதே இவைகளின் வேலை. இதன் ஒரு பிரிவான நியூடிரோபிக்ஸ் கிருமியை கண்டு பிடித்து அழிக்கும். ஈயோனிஸோபிஸ், மோனோசைலே கிருமிகளை விழுங்கி விடும். நியூடிரோபில் ரசாயன மூலமாக உடலுக்கு எதிரான தாக்குதல் அளிக்கும். பேஸோபில என்ற வகை வீக்கத்தினை ஏற்படுத்தி அங்கு அதிக இரத்த கசிவினை ஏற்படுத்தி அதன் மூலமாக அதிகமாக மற்ற செல்கள் அங்கு வர உதவும். லிம்போஸைட்ஸ் வைரஸ் போன்ற தாக்குதல்களை எதிர்க்கும்.

பளேட்லெட்ஸ்: இவை மிக சிறியவை. வெட்டு காயங்களில் இரத்த கசிவு ஏற்படும் போது இவை இரத்தத்தினை கெட்டிபடுத்தி இரத்த கசிவு வெளியேறாமல் தடுக்கும்.

ப்ளாஸ்மா: ப்ளாஸ்மா என்பது இரத்தத்தின் திரவ பகுதி. இரத்தத்தின் 60 சதவீத ப்ளாஸ்மா ஹார்மோன், நோய் எதிர்ப்பு, என்ஸைம்கள், க்ளூகோஸ், உப்பு, கொழுப்பு இவையும் இதில் உண்டு.

இரத்தத்தின் வேலைதான் என்ன? :

இரத்தத்தின் வேலை ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதுதான். உடலில் உள்ள கார்பன் டை-ஆக்ஸைடினை நுரையீரலுக்கு கொண்டு சென்று வெளி மூச்சின் மூலம் வெளியேற்றும். இரத்தம் சத்துக்கள் ஹார்மோன்கள், கழிவுப் பொருட்கள் இவற்றினையும் சுமந்து செல்லும். உடலின் வெப்ப நிலையை சீராக வைக்கும். உடலை பாதுகாக்கும்.

இரத்த பிரிவுகள் :

* ஏ+, ஏ-, பி+, பி-, ஏபி+, ஏபி-, ஓ+, ஓ- இவையே மிக அதிகமாக காணப்படும் இரத்த பிரிவுகள்.

இரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் :

இரத்த சோகை: இரும்பு சத்து குறைவு, வைட்டமின் பி12 இன்மை அல்லது குறைவு, குடல் பூச்சிகள், சில பரம்பரை நோய்கள் காரணமாக இரத்த சோகை ஏற்படுகின்றது.

* அதிக சிவப்பணுக்கள் இருத்தல்

* அதிக வெள்ளை அணுக்கள் இருத்தல்

* குறைந்த அல்லது அதிக ப்ளேட்லெட்ஸ் இவை அனைத்துமே இரத்த குறைபாடுகளுக்கு காரணமாகின்றது. அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரத்தத்தினை ஒருவர் விபத்து, ஆபரேஷன் போன்ற சில காரணங்களினால் இரத்தத்தினை இழக்கும் பொழுது அவருக்கு இரத்தமாகவே உடலில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதற்காக சுமார் 108 மில்லியன் இரத்த தானங்கள் உலகம் முழுவதும் பெறப்படுகின்றது.

எத்தனையோ நபர்களுக்கு அந்த நேஇரத்தில் கிடைக்கும் இரத்தம் உயிரை காப்பாற்றுகின்றது. எத்தனையோ முன்னேற்றத்தினை கண்ட மருந்துவத்தில் இன்னமும் இரத்தத்தினை முழுமையாய் உருவாக்கும் திறன் ஏற்படவில்லை. இரத்தத்தினை ஒருவரிடம் தானமாக பெற்றே மற்ற உயிரை காப்பாற்ற முடிகின்றது. நம் நாட்டில் மட்டும் சுமார் 4 கோடி யூனிட் இரத்தம் ஒவ்வொரு வருடமும் தேவைப்படுகின்றது. நமக்கு கிடைப்பது சுமார் 40 லட்சம் யூனிட் இரத்தம்தான்.

நாம் முன்பின் தெரியாத ஒருவருக்கு கொடுக்கும் பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு இரத்த தானம்தான். இரண்டு நொடிக்கு ஒரு முறை எங்கோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுவதாகக் கணிப்புகள் கூறுகின்றன. ஒருவர் தரும் 1 பைன்ட் இரத்தம் மூன்று உயிர்களை காப்பாற்றி விடும். அதிகமாக ஏற்புடைய இரத்தம் ஓ+ பிரிவு. ஆரோக்கியமான ஒருவர் 18 வயதிலிருந்து இரத்த தானம் கொடுக்க ஆரம்பித்து வருடமிருமுறை கொடுத்தாலும் அவர் வாழ்நாளில் 250 உயிர்களை காப்பாற்றி இருப்பார்.

ஓ- வகையினைச் சார்ந்தவர்கள் நம் நாட்டில் சுமார் 7-8 சதவீத மக்களே உள்ளனர். பொதுவில் ஓ பிரிவு இரத்தம் கொண்டவர்களால் உலகமே பயன்பெறுகின்றது. ஏபி பிரிவு இரத்தம் கொண்டவர்களின் ப்ளாஸ்மா அவசர காலங்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பயன்படுகின்றது. அனைத்து பிரிவு இரத்தங்களும், தேவை இருப்பதால் அனைவரும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்பவருக்கு சில நிமிடங்கள்தான். இரத்த தானம் பெறுபவருக்கு வாழ்வே கிடைக்கின்றது. ஆண்கள் வருடத்திற்கு நான்கு முறையும், பெண்கள் வருடத்திற்கு மூன்று முறையும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்பவர்கள் தானம் செய்வதற்கு முன்

* முதல் நாள் இரவு நன்கு தூங்க வேண்டும்.

* இரத்த தானம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு நன்கு உணவு உண்ண வேண்டும்.

* காபி இல்லாத மற்ற திரவங்கள் நீர், மோர், ஜூஸ் போன்றவை குடிக்க வேண்டும்.

* இரண்டு மணி நேஇரத்திற்கு முன்பு சிகரெட் பிடிக்காது இருக்க வேண்டும்.

* இரத்த தானம் செய்த பிறகு உடனே எழுந்திராமல் 5-10 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்.

* நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி விளையாட்டு இவைகளை அடுத்த 24 மணி நேஇரத்திற்குச் செய்யக்கூடாது.

* பொதுவில் இரத்த தானம் செய்யும் அநேகர் இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். ஒரு சிலருக்கு இரத்த தானம் செய்த பிறகு லேசான தலை சுற்றல், வாந்தி இருக்கும் குறுகிய நேஇரத்தில் இது சரியாகி விடும். பொதுவாக சைவ உணவு உட்கொள்பவர்கள் இரத்த தானம் செய்வதால் தனக்கு இரும்பு சத்து குறைந்து விடும் என்றும் அல்லது சைவ உணவின் காரணமாக தனக்கு இரும்பு சத்து குறைவாக இருப்பதால் தானம் கொடுப்பது தன்னை பாதிக்கும் என்றும் எண்ணுகின்றனர்.

இது சரியல்ல. நல்ல விகிதாச்சார உணவினை உட்கொள்ளும் சைவ உணவு உட்கொள்பவர்கள் இரத்த தானம் செய்யலாம். சுமார் 350-40 மிலி அளவே ஒருவரின் இரத்தம் தானமாகப் பெறப்படும். ஏதேனும் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் அதனை மருத்துவரிடம் முதலிலேயே கூற வேண்டும். தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருந்தால் இரத்த தானத்தை தவிர்த்திடுங்கள். ஏனெனில் எச்.ஐ.வி. வைரஸ் தொடர்பு ஏற்பட்ட சில மாதங்கள் கழித்தே இரத்தத்தில் தெரியும்.

எச்.ஐ.வி. பாதிப்பு உடையோருடன் தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக அது இரத்தத்தில் தெரியாது. நீங்கள் கொடுக்கும் இரத்தமும் பலவகை பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட பின்பே தேவைப்படுவோருக்கு அளிக்கப்படுகின்றது.blood donation 2725018

Related posts

உங்களுக்கு தெரியுமா ஒரு பைசா செலவில்லாம நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!

nathan

கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்

nathan

மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

nathan

சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம்! சூப்பர் டிப்ஸ்…

nathan

கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்றினை தவிர்க்க சில டிப்ஸ்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க காதினுள் பூச்சி சென்றுவிட்டால் என்ன செய்யவேண்டும்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பகாலத்தில் மறக்காமல் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!

nathan