17 1439801594 1reasonswhyyoushouldcryyoureyesout
மருத்துவ குறிப்பு

வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்ல, அழுதாலும் நோய்விட்டு போகும் – எப்படின்னு தெரியுமா???

வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இதுவும் உங்கள் உடல்நலனுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான்.

மகிழ்ச்சியில் சிரிக்காமல் இருப்பதை விட, துன்பத்தில் அழாமல் இருப்பது தான் பெரும் நோய். நீங்களே கூட சிலரை உங்கள் நட்பு அல்லது உறவு வட்டாரத்தில் பார்த்திருக்கலாம். "அட, என்ன ஒரு கல் நெஞ்சுக்காரன் துளி கூட அழாம இருக்கான்.." என்று நீங்களே கூட யாரேனும் கூறி காதுபட கேட்டிருக்கலாம்.

ஆம், சிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று இனி தெரிந்துக் கொள்ளலாம்….

கண்களை சுத்தம் செய்ய உதவுகிறது கண்ணீர் வெளிப்படும் போது, கண் இமைகள் மற்றும் விழிகள் இடைப்பட்டு சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது, பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.

பாக்டீரியாக்களை கொல்கிறது கண்ணீர் லைசோசைமை (Lysozyme) கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 – 95% பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த திரவம் ஆகும்.

நச்சுகளை அகற்றுகிறது அழுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது, ஏனெனில், இது உங்கள் உடலில் இருக்கும் பெருமபாலான நச்சுகளை அகற்ற உதவுகிறது. நீங்களே கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நீங்கள் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து மேப்பட்ட உடல்நிலை மற்றும் மன நிலையை உணர்வீர்கள்.

மன நிலையை மேலோங்க வைக்க உதவும் உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.

மாங்கனீஸ் சத்தை குறைக்கிறது மாங்கனீஸ், மனிதர்களின் மன நிலையில் பாதிப்பு (அல்லது) தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அழும் போது மாங்கனீஸ் குறைவதால், உங்கள் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.

மன அழுத்தம் குறையும் அடுத்த முறை நீங்கள் மிகவும் மன அழுத்தமாக இருக்கும் போது அழ முயற்சிக்கலாம். ஏனெனில் இது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது கொஞ்சம் கடினம் தான், மன அழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க உடனே அழ முடியாது. ஆனால், அழுகை வரும் போது அடக்க வேண்டும், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் இது சற்று விசித்திரமாக தான் இருக்கிறது. ஏனெனில், அழுகை ஒருவரின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறதாம். ஆம், நாம் முன்னர் கூறியது போல அழுகை உங்களது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

சருமத்தை பாதுகாக்கிறது இது உங்களை வியக்க வைக்கும், நமது கண்ணீரில் இருக்கும் திரவம், சருமத்தில் இருக்கும் நச்சுகளை போக்கி, சருமத்தை பாதுகாக்கிறது.

17 1439801594 1reasonswhyyoushouldcryyoureyesout

Related posts

தெரிஞ்சிக்கங்க… வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!!

nathan

பெண்களை அவதிக்குள்ளாக்கும் எலும்பு தேய்மானம்

nathan

இத படிங்க சீராக்கும் கருஞ்சீரகம் சீறிப்பாய்ந்து.!

nathan

தெரிந்துகொள்வோமா? கர்ப்ப காலம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகள்!

nathan

உங்களுக்கு குழந்தை பாக்கியம் குறித்து பயம் உள்ளதா?? அப்ப இத படிங்க!

nathan

உண்மையான காதலுக்கு தேவை புரிதல் தான்! உடலும் அழகும் இல்லை..!

nathan

blood allergy symptoms in tamil – ரத்த அல்லெர்ஜி

nathan

5 வார அல்ட்ராசவுண்ட் என்றால் என்ன?

nathan

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

nathan