உள்ளங்கைகள் பலருக்கும் மிருதுவாக இருப்பதில்லை. கைகள் மிருதுவாக இருந்தாலும் உள்ளங்கை கடினமாக இருக்கும்.
இதற்கு காரணம் பாத்திரம் விளக்கும் மோசமான கெமிக்கல் நிறைந்த சோப், கடினமான வேலைகளை செய்தல், மற்றும் மண் போன்றவற்றில் சிறுவயதில் விளையாடியிருந்தால் இவ்வாறு உள்ளங்கைகள் கடினமாக மாறிவிடும்.
இந்த உள்ளங்கைகள் மிருதுவாக்க நீங்க பல குறிப்புகளை ட்ரை பண்னியிருந்தும் பயனளிக்கவில்லையா? இந்த குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
பால் மற்றும் எலுமிச்சை சாறு : காய்ச்சி ஆறிய பாலில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்க்கவும். இதனை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன் பின் அதனை கை மற்றும் உள்ளங்கைகளில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவவும். இதனை தினமும் செய்து வந்தால் கைகளில் இருக்கும் சொரசொரப்பு காணாமல் போய் விடும்.
ஓட்ஸ் மாஸ்க் : தேவையானவை : ஆலிவ் எண்ணெய் ஓட்ஸ் கிளிசரின்
இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து மாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளுங்கள். பின் இதனை கைகள் மற்றும் உள்ளங்கைகளில் தேய்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
பிறகு நீரில் கழுவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். சொரசொரப்பு நீங்கி உள்ளங்கை மிருதுவாகும்.
வெண்ணெய் மற்றும் வெள்ளரி : இரவு தொங்கச் செல்லுமுன் வெண்ணையை உருக்கி, அதில் சிறிது வெள்ளரி சாறு, பாதாம் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை உள்ளங்கைகளில் தடவி 20 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் கையை கழுவலாம். சோப் போடாமல் வெறுமனே கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். ஒரே வாரத்தில் கைகள் மென்மை பெறும்.
ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதில் சிறிது சர்க்கரையை கரைத்துக் கொள்ளவும். இதனை உள்ளங்கைகளில் பரபரவென தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். உள்ளங்கை மிருதுவாகும்.
உறை அணியவும் : அதிக குளிர் அல்லது ஏசியில் இருக்கும்போது கைகளில் ஈரப்பதம் குறைந்து வறண்டு விடும். இதனால் கைகளில் சுருக்கம், வறட்சி, ஏற்பட்டு கடினமாகிவிடும். இந்த அதிகப்படியான குளிரை தவிர்க்க கைகளுக்கு உறை அணிந்து கொள்வது கைகளில் சுருக்கம் உண்டாகாமல் தடுக்கும்.