31.8 C
Chennai
Thursday, Jul 24, 2025
201701190901110364 raw mango thokku SECVPF
​பொதுவானவை

மாங்காய் தொக்கு செய்வது எப்படி

இந்த மாங்காய் தொக்கை செய்வது மிகவும் சுலபம். தயிர்சாதம், பொங்கலுக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாங்காய் தொக்கு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பெரிய மாங்காய் – 1
நல்லெண்ணெய் – கால் கப்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* மாங்காயின் தோலை எடுத்து விட்டு துருவிக் கொள்ளவும்.

* வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் துருவிய மாங்காயை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

* அடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

* மாங்காயை பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் பொடித்த வெந்தயத்தைச் சேர்க்கவும்.

* மாங்காய் நன்கு தொக்கி வரும் போது தனியே ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணையைக் கொதிக்க வைத்துத் தொக்குடன் சேர்க்கவும்.

* சூப்பரான மாங்காய் தொக்கு ரெடி.

* .மிகவும் ருசியான இந்த ஊறுகாய் தயிர்சாதம், பொங்கல் போன்ற உணவுகளுக்கு அருமையான இணை.201701190901110364 raw mango thokku SECVPF

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி

nathan

சுவையான காஞ்சிபுரம் இட்லி

nathan

சுவையான பக்வீட் பக்கோடா

nathan

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

nathan

காலா சன்னா மசாலா

nathan

நீர் தோசை

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

தனியா ரசம்

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி….

nathan