28.8 C
Chennai
Thursday, Oct 9, 2025
201701181329300199 Body heat reduce palaya satham Neeragaram SECVPF
சைவம்

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

பழையசாதத்தில் கொஞ்சமாய் உப்பிட்டு மோரைக் கரைத்து சின்னவெங்காயம் அல்லது பச்சை மிளகாயுடன் சாப்பிட்டால் உடல் சூட்டை குறைத்து ஜில்லென்று இருக்கும்.

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்
பழைய சாதத்தை சாப்பிடுவதால் எந்த நோய் நொடியும் அண்டாது. நாள் முழுக்கப் பழைய சாதம் நம்மைச் சுறுசுறுப்புடன் வைக்கும். முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது.

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது,
3. உடற்சோர்வு நீங்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
4. தணித்து உடலிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்.
5. சிறுகுடலுக்கு நன்மை பயக்கும்.
6. குடல்புண், ஓவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும்.
7. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
8. உடல் எடை குறையும்.
9. காலையில் சாப்பிடும் பழைய சாதத்தால் நண்பகல் வரை வேறு எந்த உணவையும் தேடாது.
10. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

பழையதைச் சாப்பிடுவதையே அநாகரிகமாக நினைக்கும் இன்றைய பிள்ளைகளுக்குப் பழைய சாதத்தின் மகிமை தெரியாதது வருத்தமே.. பீட்ஸா, பர்கர், பொரித்த உணவுகள், மோசமான உணவுகள் என்று உடலிற்குத் தீங்கான விஷயங்களுக்குக் காசு கொடுக்கும் பிள்ளைகளுக்குப் பழைய சோற்றின் மகிமையைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

பெரியவர்கள் சொன்னது, செய்தது பல உள்ளர்த்தங்களில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் சமையலறை அஞ்சறைப்பெட்டிகளில் வியத்தகு விஷயங்கள் இருக்கின்றன. பாட்டிகளிடம் கேட்டால் தங்கள் அனுபவ அறிவால் எது உடலிற்கு நன்மை பயக்கும் என்பதைப் புட்டு புட்டு வைப்பார்கள்..

பழையசாதத்தில் கொஞ்சமாய் உப்பிட்டு மோரைக் கரைத்து சின்னவெங்காயம் அல்லது பச்சை மிளகாயுடன் சாப்பிட்டால் கோடை வெயிலிற்கு ஜில்லென்று இருக்கும். கிராமங்களில் வயலோரம் வேலை செய்பவர்களுக்குத் தெம்பு எதிலிருந்து கிடைத்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். உடல் உஷ்ணத்தைத் தடுக்கவும் கண்ட வியாதிகள் அண்டாமல் தவிர்க்கவும் பழையசாதத்தை உண்ணுங்கள்.201701181329300199 Body heat reduce palaya satham Neeragaram SECVPF

Related posts

மீல் மேக்கர் – பட்டாணி குருமா செய்வது எப்படி

nathan

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

nathan

பேச்சுலர்களுக்கான… பருப்பு கடையல்

nathan

கோவைக்காய் பொரியல்

nathan

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

nathan

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

nathan

கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்

nathan

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan