201701181359552058 After marriage women want to change Initial SECVPF 1
மருத்துவ குறிப்பு

பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா?

பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.

பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா?
பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள். அதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள்.

அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களிலோ அப்பா பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும்போது, அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன.

ஆண்களுக்குத் திருமணத்துக்கு முன்போ பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்சனைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்?

“பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. உண்மையில் பொது சிவில் சட்டம் என்பதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக மாற்றுவதே சரியாக இருக்கும். பெண்களுக்கு இனிஷியல் பிரச்சனை எப்போது வந்தது? அவர்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லும்போதுதான். ஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், கணவன் இறந்துவிட்டால் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனும் சிலரால் வகுக்கப்பட்ட வரையறைகளே, பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்கக் காரணம்.

இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு வரை கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். திருமணப் பத்திரிகைகளில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இருக்கும். கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்குப் பின், அந்தப் பெண்ணின் பெயரே மறைந்துவிடுகிறது. எலிஸபெத் எனும் பெண் டேனியலைத் திருமணம் செய்தபின், மிஸஸ் டேனியல் என்றே அழைக்கப்படுகிறார். இந்த ஆண்மைய சமூகப் பழக்கங்களின் தொடர்ச்சியாகவே கணவரின் பெயர் இனி ஷியலாக பெண்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி.

* ஒரு பெண், ஆணைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு, ஒரே இனிஷியலோடு இருக்க முடியும்.

* ஒரு பெண் தன் தந்தையின் பெயரைத்தான் இனிஷியலாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் தந்தையின் பெயரோடு, தாய் பெயரையும் இணைத்து இனிஷியலாக வைத்திருக்கலாம். அல்லது, தந்தை பெயர் இல்லாமல் தாய் பெயரை மட்டும்கூட இனிஷியலாக வைத்திருக்கலாம்.

* இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ளது” என்று தெளிவுபடுத்தினார் அருள்மொழி.

ஒரு பெண் இனிஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுயமரியாதை சார்ந்ததும்கூட. திருமணத்துக்குப் பிறகு தன் நேசத்துக்கு உரிய தந்தையை தன் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான்.

“நேசித்து திருமணம் செய்திருந்தாலும்கூட, தன் இனிஷியலை மாற்றிக் கொள்ளும்போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும்.

இந்தியாவில் அப்பாவின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள்ளது. அம்மாவின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. ஒரு பெண்ணின் தந்தை சரியில்லாதவராக, குடும்பத்தை விட்டு ஓடியிருந்தாலும்கூட அவரின் பெயரை அந்தப் பெண் இறுதிவரை சுமக்கவே வேண்டியிருக்கிறது. இதில் அம்மாவின் பெயரையும் இனிஷியலாகக் கொள்ளும் பழக்கத்தை பலரும் முன் வைப்பதேயில்லை.

ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தனித்த அடையாளம் இருக்கிறது. அதை இழக்காமல் வாழ்வோம்!201701181359552058 After marriage women want to change Initial SECVPF

Related posts

தெரிந்துகொள்வோமா? கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் உடல் நல பாதிப்புகள் என்னென்ன?

nathan

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஒரே நாள்ல உடம்புல இருக்கற கழிவெல்லாம் வெளியேறணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அஜீரணத்தை எளிதில் குணப்படுத்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

nathan

உங்களுக்கு பல் கூசுதா? ரத்தம் வருதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வந்தால்.. இந்த பிரச்சினையாகவும் இருக்குமாம்…!

nathan

உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

nathan

தடவத்தான் தைலம்… தேய்க்க அல்ல

nathan