30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
201701181447518103 bread egg upma SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை உப்புமா செய்து கொடுக்கலாம். இப்போது பிரட் முட்டை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா
தேவையான பொருட்கள் :

பிரட் – 5 துண்டுகள்
முட்டை – 3
பெரிய வெங்காயம் – 1
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிப்பதற்கு.

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத் தூள் – சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* முட்டை உதிரியாக வந்ததும் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கிளறவும்.

* நன்றாக உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான பிரட் முட்டை உப்புமா ரெடி!!!201701181447518103 bread egg upma SECVPF

Related posts

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

சத்தான சுவையான பருப்புத் துவையல்

nathan

குனே

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

சுவையான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan