27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
belly thigh simple exercises 1
உடல் பயிற்சி

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.
இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும். இந்தப் பிரச்சனைக்கு 2 எளிய பயிற்சிகள் உள்ளன. அவை
ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.
இதையும் 25 தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும். இந்த இரு பயிற்சிகளை தினமும் வீட்டில் செய்த வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.belly thigh simple

Related posts

வீட்டில் செய்யக்கூடிய தொப்பையை குறைக்கும் பயிற்சிகள்

nathan

வலிமை தரும் பயிற்சி

nathan

ஃபிட்னஸ்ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்!…

sangika

சூப்பர் டிப்ஸ்! இயற்கையான முறையில் உங்களது உயரத்தை வேகமாக அதிகரிப்பது எப்படி?

nathan

கைகளில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்

nathan

ஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு இரண்டு விதமான உடற்பயிற்சிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்

nathan

படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்

nathan