இல்லற வாழ்க்கையில் பெண்கள் அவர்களது மதிப்பை முழுதாய் அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். எதற்கு எடுத்தாலும் தனது
கணவனை எதிர்நோக்கி இருப்பார்கள். இது தான் பெண்கள் செய்யும் முதல் தவறு. குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பும், மதிப்பும் தான்
மிகவும் பெரியது என அவர்கள் அறிதல் வேண்டும்.
அன்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தங்களது பங்கெடுப்பை அதிகமாக கொடுக்கும் பெண்கள், அவர்களுக்கு என்ன
வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.
பெண்கள் காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளிலும் பெண்கள் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை
அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் மற்றவரது விருப்பு, வெறுப்புக்காக வாழ்ந்து தனது சொந்த விருப்பங்களை மறந்து விடுகின்றனர்.
அல்லது மறக்கடிப்படுகின்றனர். இது, பெரும்பாலான பெண்கள் தங்களது திருமணத்தில் செய்யும் மிகப்பெரிய தவறு.
கணவனாக இருந்தாலும் கூட, எதற்கெடுத்தாலும் அவரையே சார்ந்திருப்பது. முக்கியமாக வேலைக்கு செல்லாமல் வீட்டுப் பெண்ணாக
இருக்கும் மனைவிகள் தான் இந்த மிகப்பெரிய தவறை செய்கிறார்கள். நீங்களாக முனைந்து சில காரியங்கள் செய்ய வேண்டியது
அவசியம்.
இது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்த உதவும்.
குடும்பத்திற்காக நாள் முழுவதும் நேரம் ஒதுக்கும் அவர்களால் அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்குவதில்லை. இல்லற வாழ்க்கையில்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் தான். இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.
ஆனால்,
அதற்கென உங்களது சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கணவன், பிள்ளை, உறவினர் என அனைவரின் வாழ்க்கையிலும் பங்கெடுத்து கடைசியில் தங்களது வாழ்க்கையை மறந்துவிடுவார்கள்
பெண்கள். உங்கள் வாழ்விலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
Related posts
Click to comment