இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க 3 எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் 3 எளிய உடற்பயிற்சிகள்
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் இறங்கும் போது, பலரும் அடிவயிறு, தொடை, பிட்டம் மற்றும் கைகளில் உள்ள கொழுப்பைத் தான் குறைக்க முயல்வார்கள். கொழுப்புக்கள் அடிவயிற்றிற்கு அடுத்தப்படியாக இடுப்புப் பகுதியில் தான் அதிகம் தேங்கும். கொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இங்கு இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க உதவும் சில எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன
புஷ்-அப் :
புஷ்-அப் பலரும் புஷ்-அப் கைகளுக்கு ஓர் நல்ல வடிவமைப்பைக் கொடுக்க மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் புஷ்-அப் செய்வதால், இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புக்களும் தான் கரையும். ஆகவே உங்கள் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு தினமும் தவறாமல் புஷ்-அப் செய்யுங்கள்.
சைடு புஷ்-அப் :
படத்தில் காட்டியவாறு சைடு புஷ்-அப் செய்வதன் மூலமும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம். அதுவும் இடது பக்கம் 30-45 நொடிகள் இருக்க வேண்டும். பின் தேப் போல் வலது பக்கம் 30-45 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி 3 செட் செய்ய வேண்டும்.
பக்கவாட்டில் டம்பெல் தூக்குதல் :
படத்தில் காட்டியவாறு இரண்டு கைகளிலும் டம்பெல்ஸை தூக்கி வைத்து, கால்களை இடுப்பளவிற்கு விரித்து, முழங்காலை 45 டிகிரி இருக்குமாறு சற்று மடக்கி, பின் டம்பெல்ஸை தோள்பட்டையளவிற்கு உயர்த்தி, பின் கீழே கொண்டு வர வேண்டும். இப்படி 12 எண்ணிக்கையில் 2 செட் செய்ய வேண்டும். இதனாலும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம்.