28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
Chicken Pakoda final final 17410
அசைவ வகைகள்

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘சிக்கன் பக்கோடா’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:

சிக்கன் (எலும்பு நீக்கியது) – கால் கிலோ
பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) – 50 கிராம்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கடலை மாவு – இரண்டு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு
கொத்தமல்லித்தழை(பொடியாக நறுக்கியது) – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, மெல்லிய நீளமான துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நறுக்கிய சிக்கன் துண்டுகளில் நன்கு தண்ணீர் வடித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும். சிக்கன் பக்கோடாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.

குறிப்பு:

சிக்கன் பக்கோடா கலவை கெட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கலவை நீர்த்துப் போனால் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.Chicken Pakoda final final 17410

Related posts

இறால் பெப்பர் ப்ரை

nathan

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

nathan

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட்

nathan

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

nathan

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan

அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி

nathan

சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்

nathan