m6
தலைமுடி சிகிச்சை

கூந்தல் பராமரிப்பு!

* முடி கொட்டுவது தொடர்ந்து கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
* தலை குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.
* அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதேபோல் ஷாம்பு தேய்த்து குளிக்கும்போது முடியை நன்றாக அலசவும்.
* ஒவ்வொரு முறை தலை குளிக்கும்போதும் கன்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கன்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கன்டிஷனர் உபயோகிக்கும்போதும் முடியை நன்றாக அலச வேண்டும்.
* ஷாம்பு போட்டு தலைகுளித்தப் பிறகு, ஒரு தேக்கரண்டி விநிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அதனைக் கொண்டு தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பளபளபாகவும் இருக்கும்.
* மருதாணி தலைமுடிக்கு மிகச்சிறந்த கன்டிஷனர். ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். மருதாணியைத் தலையில் தேய்த்து ஊறவைத்த பிறகு ஷாம்பூ போடக் கூடாது.
* சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.
* வாரத்திற்கு ஒருமுறையேனும் விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். m6

Related posts

கூந்தல் வறட்சியை தடுக்கும் விளக்கெண்ணெய்

nathan

பொடுகை அகற்ற

nathan

மோசமான கூந்தல் அமைப்பா? முடி உதிர்தலா? மயோனைஸ் ரெசிபி ட்ரைபண்ணுங்க!!

nathan

ஹேர் டையை தூக்கி போடுங்க! நரை முடியை போக்க 11 சூப்பர் டிப்ஸ்!

nathan

கலரிங் செய்யப்பட்ட முடியில் பளபளப்புத்தன்மையை நீடிக்கச் செய்வது எப்படி?…

nathan

மொட்டை போட்டால் முடி வேகமாக வளருமா?

nathan

கூந்தல் அதிகமாக உதிர்கிறதா? இந்த 3 சூப்பர் பொருட்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்!!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை வேகமாக்கும் இந்த ஷாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

nathan

பூண்டை இப்படி யூஸ் பண்ணுனீங்கனா… முடி கொட்டுறது நின்னு…

nathan