தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
வற்றல் மிளகாய் – 6
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – விருப்பப்பட்டால்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும்.
பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
சிறிது வெல்லத்தை பொடி செய்து துவையலில் சேர்க்கவும். வெந்தயத்தை அதிகம் வறுத்தால் கசந்துவிடும்.
பக்குவமாக வறுத்து எடுத்தால் சிறிதும் கசக்காது.. கசப்பாக இருந்தால் சிறிது வெல்லம் சேர்க்கவும். சுவையான, சத்துகள் மிகுந்த வெந்தயத் துவையல் தயார்.