31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சட்னி வகைகள்

வெந்தயத் துவையல் (சட்னி)

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
வற்றல் மிளகாய் – 6
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – விருப்பப்பட்டால்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும்.

பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

சி‌றிது வெல்லத்தை பொடி செய்து துவையலில் சேர்க்கவும். வெந்தயத்தை அதிகம் வறுத்தால் கசந்துவிடும்.

பக்குவமாக வறுத்து எடுத்தால் சிறிதும் கசக்காது.. கசப்பாக இருந்தால் சிறிது வெல்லம் சேர்க்கவும். சுவையான, சத்துகள் மிகுந்த வெந்தயத் துவையல் தயார்.

Related posts

தேங்காய் – பூண்டு சட்னி

nathan

சூப்பரான கேரட் தக்காளி சட்னி

nathan

சத்து நிறைந்த கம்பு கார சட்னி

nathan

கொத்தமல்லி சட்னி

nathan

தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் இந்த பீர்க்கங்காய் சட்னி…

sangika

ஆரஞ்சு தோல் பச்சடி

nathan

லெமன் சட்னி

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

முட்டைக்கோஸ் சட்னி

nathan