28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
29 1472451082 6 charcoal
முகப் பராமரிப்பு

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க உதவும் சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்கள்!

பெரும்பாலானோர் முகத்தில் பருக்களால் மட்டுமின்றி, கரும்புள்ளி பிரச்சனையாலும் பெரும் அவஸ்தைப்படுகின்றனர். இந்த கரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இவை சருமத்தின் மென்மைத்தன்மையைப் பாதிக்கும்.

இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். தினமும் ஒருவர் சருமத்துளைகளை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், இம்மாதிரியான புள்ளிகளால் அவஸ்தைப்படக்கூடும்.

இந்த கரும்புள்ளிகளைப் போக்க என்ன தான் ஸ்வீசர்கள் இருந்தாலும், அவை மிகுந்த வலியை உண்டாக்குவதோடு, சருமத்துளைகளை விரிவடையச் செய்து, முக அழகையே கெடுத்துவிடும்.

பட்டை
1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவி, சுத்தமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க கரும்புள்ளிகள் நீங்கும்.

ஓட்ஸ்
1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 15-20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

உப்பு
1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராப்பெர்ரி பழத்தை அரைத்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஸ்கரப் செய்து 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.

சாம்பல்
சாம்பலை நீர் கொண்டு பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம், முகம் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

மஞ்சள்
மஞ்சள் மற்றும் சந்தனப் பொடியை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பிரகாரசமாக காட்சியளிக்கும்.

தக்காளி
தக்காளியைக் கொண்டு முகத்தை தினமும் தேய்த்து 15 நிமிடம் கழித்து, முகத்தில் வெதுவெதுப்பான நரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, சரும பிரச்சனைகள் விலகி சருமம் அழகாக ஜொலிக்கும்.

முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.
29 1472451082 6 charcoal

Related posts

அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

nathan

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

உங்க உதடுகள் கருமையா? அப்ப இத படிங்க!

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika

ஒரு வாரத்தில் ஒளிரும் தோலை பெறவது எப்படி – மற்றும் நாளுக்கு நாள் அதற்கான வழிமுறைகள

nathan

உங்களுக்கு பொலிவான தோற்றத்தைத் தரும் ‘தக்காளி ஃபேஸ் பேக்’

nathan

சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!தெரிஞ்சிக்கங்க…

nathan

முகம் கழுவ சோப்பிற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!

nathan

முகத்தில் உள்ள முடிகளை நீக்க

nathan