27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
25 1472102129 hair
தலைமுடி சிகிச்சை

சொட்டையில் முடி வளர வைக்கும் வால் மிளகு பற்றி தெரியுமா?

சொட்டை விழுவதற்கான மிக முக்கிய காரணம் மரபணுதான். அதைத் தவிர பல காரணங்கள் உண்டு. அதிக மன உளைச்சல், டென்ஷன், கோபம், ஊட்டச் ஸ்த்து குறைப்பாடு.

பெண்களுக்கு பெரும்பாலும் முன் நெற்றியில்தான் சொட்டை விழும். இதற்கு மரபியல் தவிர தூக்கி இறுக்கமாக கூந்தலை சீவி சடைபின்னுவது அல்லது அலங்காரம் செய்வது காரணமாகும்.

பெண்களை விட ஆண்களே சொட்டையால் அதிக பாதிப்படுகிறார்கள். 30 வயதிலேயே சிலருக்கு தொடங்கிவிடும். ஆரம்பத்திலேயெ அதனை கவனித்தால் கூடுமானவரை அதனை தடுக்க முடியும். இதற்கான் குறிப்புகள் இங்கே குடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நிச்சயம் பயனளிக்கக் கூடியவை.

பட்டை + தேன்+ ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் – முடிக்கேற்ப தேன்- 2 ஸ்பூன் பட்டைப் பொடி – 1 டீ ஸ்பூன் சீரகப் பொடி – 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சுட வைத்து அதில் தேன் மற்றும் பட்டைப் பொடியை கலந்து தலையில் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். தினம் செய்யலாம்.

வெந்தயம் + சீரகம்+ கருவேப்பிலை :
வெந்தயத்தை மற்றும் சீரகத்தை ஊற வைத்து மறு நாள் கருவேப்பிலையுடன் அரைத்து தலையில் தடவவும். 15 நாட்கள் தொடர்ந்து செய்தால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும். சொட்டையிடங்களிலும் பயனளிக்கும்.

வெங்காயம் + தேன் :
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவவும் . 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

வால்மிளகு + எலுமிச்சை விதை :
எலுமிச்சை விதைகள் – 7 பழம் வால் மிளகு – 10 7 எலுமிச்சை பழங்களின் விதைகளை எடுத்து அதனுடன் வால் மிளகை சேர்த்து நன்றாக பொடி செய்து அதனை சொட்டை இருக்கும் இடத்தில் தடவுங்கள்.தினமும் இருமுறை இப்படி செய்து வந்தால் சொட்டையில் சில வாரங்களிலேயே முடி வளர்ச்சி தெரியும்.

கற்பூரம் + விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெயை சூடுபடுத்தி, அதில் கற்பூரத்த்தை பொடி செய்து போடவும். கரைந்ததும் அதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். வாரம் 4 நாட்கள் செய்து வாருங்கள்.

25 1472102129 hair

Related posts

பெண்களே உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வெள்ளை முடியால் தொல்லையா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!

nathan

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

nathan

இளநரையை குணப்படுத்தும் துளசி..! இதை முயன்று பாருங்கள்….

nathan

இளநரையை போக்கும் சீயக்காய்

nathan

கறிவேப்பிலையுடன், நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை.

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

nathan

உங்களுக்கு கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத ட்ரைப் பண்ணி பாருங்க….

nathan