27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201612300921073305 denim pants for women SECVPF
ஃபேஷன்

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

ஜீன்ஸ் பேண்ட்கள் நவீன யுவதியர்களுக்கு ஏற்றவாறு விதிவிதமான புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கி தருகின்றன.

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்
பெண்கள் இன்றைய நாளில் மார்டன் ஆடைகள் அணிவதில் அதிகம் விரும்புகின்றனர். இதில் மிக முக்கியமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அதற்கேற்ற மேல் டாப் அணிவது அதிகமாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட்கள் நவீன யுவதியர்களுக்கு ஏற்றவாறு விதிவிதமான புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கி தருகின்றன. பெண்களின் ஜீன்ஸ் பேண்ட் என்பது பிரத்யேகமான அளவுகளில் அவர்களுக்கு ஏற்ப அணிய ஏற்ற கச்சிதமான வடிவில் தைக்கப்படுகின்றன.

உலகளவில் பெண்கள் அலுவலகம் முதல் சாதாரண வெளி பணிகள் வரை அனைத்திற்கும் ஜீன்ஸ் அணிந்து செல்வது சர்வ சாதாரணமாய் உள்ளது. அதற்கேற்ப ஆண்டுக்கு ஆண்டு புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வித்தியாசமான வடிவங்களில் ஜீன்ஸ் பேண்ட்களை உருவாக்கி மங்கையர் மனதை கவர்கின்றனர். இந்த வகையில் தற்போது புதிய ஜீன்ஸ் பேண்ட் வகைகள் பல அறிமுகமாகி உள்ளன. இவை எல்லா நாட்டு பெண்களும் அணிகின்றவாறு சர்வதேச வடிவமைப்பில் உள்ளது என்பதுடன் தினசரி அணிவதற்கேற்ற கூடுதல் அழகுடன் விளங்குகிறது.

நட்சத்திர அந்தஸ்து பெறும் ஹை-லோ ஹெம்லைன்ஸ் :

இந்த ஜீன்ஸ் பேண்ட் முந்தைய பேண்ட் மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கி பிடிக்காமல் தளர்வின அமைப்புடன் காணப்படும் இந்த ஜீன்ஸ் பேண்ட் பெயருக்கு ஏற்ப இறக்கமாக தோற்றத்தை கொண்டது. அதாவது பேண்ட் பின்பகுதி சற்று இருக்கமாகவும், முன்பகுதி ஷீ தெரிவதற்கு ஏற்ப மேல் ஏற்றமாகவும் வெட்டி விடப்பட்டிருக்கும். முன்புற ஏற்ற பகுதி தைக்கபடாமல் வெட்டிய அமைப்புடனே தோற்றமளிக்கும். ஸ்டெரயிட்-லெக் டிசைன் ஜீன்ஸில் இந்த ஏற்ற இறக்க வெட்டு அமைப்பும், நடுப்புறம் மற்றும் ஓரப்பகுதி வேறுபடுத்தும் நோக்கில் வண்ணம் வெளிற செய்யப்பட்டுள்ளது. இதனை சாலையில் அணிந்து செல்லும் பெண்மணி சாலையில் நட்சத்திரமாக ஜொலிப்பர்.

வண்ணமயமான எம்பிராய்டரி டெனிம் :

பெண்களை கவர்ந்திழுக்கும் வகையில் டெனிம் பேண்ட்களிலும் வண்ணமயமான எம்பிராய்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. பூட்-கட் மாடல் பேண்ட் அமைப்பின் மேல் முதல் கீழ் வரை இடைவெளிவிட்டு அடர்த்தியான வண்ணத்தில் பூக்கள், பறவைகள், இலைகள், பூச்சிகள் போன்றவை எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும். வித்தியாசமான வண்ணமயமான டெனிம் பேண்ட் நட்பாண்டில் மங்கையர் மனம் கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிளவு அமைப்புகள் கூடிய ஸ்லிட் ஹெம்ஸ்:

புதிய வடிவமைப்பு உத்திகளுக்கு மேற்கண்ட முயற்சியின் புதிய வெளிப்பாடு தான் ஸ்லிட் ஹெம்ஸ். அதாவது பகுதி வாரியான ஸ்டெரெயிட் லெக் மாடல் வகையில் மென்மையான விரிவடையும் வகையில் இறங்கி கீழ் கணுக்கால் பகுதிக்கு சற்று மேல் இருந்து பிளவு செய்யப்பட்டு தைக்கப்பட்டுருக்கும். அதாவது தலைகீழாக "V" ஷேப் இருப்பது போன்று வெட்டி தைக்கப்பட்டிருக்கும். இதுவும் பெண்கள் அணியும் ஷீ-க்கள் தெளிவுற தெரிவதற்கு என்பதுடன், சற்று வித்தியாசமாகவும் இருப்பதற்கு என வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்டன் முன்புற பேண்ட்கள்:

கப்பல் துறையிலும், 70 களின் பிற்பகுதியிலும் வந்த மாடல் தான் இந்த பேண்ட். போன ஆண்டு பட்டன்-முன்புற குட்டை பாவாடை (Sk-i-rt) பிரபலமாக இருந்தது. அது போன்று பூட்-கட் மாடலில் பழமை மாடலான பட்டன் முன்புறத்தில் உள்ள அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய வட்டவடிவ பட்டன்கள் முன்புறம் வரிசையாக தெரிவது போன்று வடிவமைக்கப்பட்டது. இதுவும் நவ நாகரீக பெண்களின் மன ஆவலை பூர்த்தி செய்யும் ஜீன்ஸ் பேண்ட்-ஆக இருக்கிறது.

டெனிம் பேண்ட்களை போன்று புதிய வரவுகளாக ஜீன்ஸ் ஜாக்கெட் மற்றும் மைக்ரோ மினி ஸ்கர்ட் போன்றவை புதிய வடிவில் வந்துள்ளன. இவையணைத்தும் மாடர்ன் மங்கையரின் மனதை கவரும் வகையில் தான் உள்ளன. 201612300921073305 denim pants for women SECVPF

Related posts

டிசைனர் சேலையை வேறு பயன்பாடுக்கு மாற்ற முடியுமா?

nathan

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

அழகு அதிகரிக்க நகைகளை வெரைட்டிய போடுங்க…

nathan

இவைகளை அறவே தவிர்த்து, இல்ல‍றத்தை நல்ல‍றமாக்கி, வளம் பெற…..

sangika

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு..?

nathan

கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்…..

sangika

இவ்வாறான ஆண்மகனை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையாக!…

sangika

லெக்கிங்ஸ் ஆபாசமா?

nathan

சிறுவர்களின் ஆடையில் புதிய வரவுகள்

nathan